அதானி குழுமம், தனது பங்குகள் மீதான கடன் தொகையை வரும் மார்ச் மாத இறுதிக்குள் செலுத்த திட்டமிட்டுள்ளது. கடன் தொகை 690 மில்லியன் டாலரில் இருந்து 790 மில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன்களை, அதானி குழுமம், முன்கூட்டியே செலுத்தவோ அல்லது திருப்பி செலுத்தவோ உள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், 2024 ஆம் ஆண்டுக்கான தனது 3 வருட பாண்டுகளுக்கு மறு நிதி அளிப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மதிப்பு 800 மில்லியன் டாலர்கள் என்று கருதப்படுகிறது. இது தவிர, அதானி குழுமத்தின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களிலும் மறுநிதியளிப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன், முதலீட்டாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, மார்ச் மாத இறுதிக்குள், அதானி பங்குகள் மீதான அனைத்து விதமான கடன்களையும் திருப்பி செலுத்த கௌதம் அதானி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.














