காரைக்கால் துறைமுகத்தை முழுமையாக கையகப்படுத்திய அதானி போர்ட்ஸ்

April 1, 2023

அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், காரைக்கால் துறைமுகத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. “காரைக்கால் துறைமுகம் அனைத்து வானிலை சூழல்களிலும் இயங்கக்கூடிய வகையில் உள்ள துறைமுகமாகும். இந்த துறைமுகம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, 850 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு தளவாடச் செலவுகள் குறையும்” என்று அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில், துறைமுகத்தின் திறனை இரு மடங்காக […]

அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், காரைக்கால் துறைமுகத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

“காரைக்கால் துறைமுகம் அனைத்து வானிலை சூழல்களிலும் இயங்கக்கூடிய வகையில் உள்ள துறைமுகமாகும். இந்த துறைமுகம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, 850 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு தளவாடச் செலவுகள் குறையும்” என்று அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில், துறைமுகத்தின் திறனை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும், மற்றொரு கன்டெய்னர் முனையம் அமைத்து, பல்துறை சார்ந்த துறைமுகமாக இதனை தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu