கங்கவரம் துறைமுகத்தை கைப்பற்றும் அதானி குழுமம்

October 11, 2022

இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமான அதானி போர்ட்ஸ் நிறுவனம், கங்கவரம் துறைமுகத்தை கையகப்படுத்த, NCLT-ன் ஒப்புதல் கிடைத்துவிட்டதாக அறிவித்துள்ளது. கங்கவரம் துறைமுகத்தின் 58.1% பங்குகளை அதானி போர்ட்ஸ் வாங்குவதற்கு அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் நகரங்களின் நேஷனல் கம்பெனி லா டிரிபியூனல் (NCLT) ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் கங்கவரம் துறைமுகம் 100% அதானிக்கு போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி […]

இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமான அதானி போர்ட்ஸ் நிறுவனம், கங்கவரம் துறைமுகத்தை கையகப்படுத்த, NCLT-ன் ஒப்புதல் கிடைத்துவிட்டதாக அறிவித்துள்ளது. கங்கவரம் துறைமுகத்தின் 58.1% பங்குகளை அதானி போர்ட்ஸ் வாங்குவதற்கு அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் நகரங்களின் நேஷனல் கம்பெனி லா டிரிபியூனல் (NCLT) ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் கங்கவரம் துறைமுகம் 100% அதானிக்கு போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கரண் அதானி, "கங்கவரம் துறைமுகத்தை இணைக்கும் வகையில், சாலை வழி மற்றும் ரயில் வழித்தடங்கள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தியாவின் எட்டு மாநிலங்களை இணைக்கும் முக்கிய வணிகத் துறைமுகமாக இது விளங்குகிறது. அதனால், அதானி போர்ட்ஸ் நிறுவனம், இந்த துறைமுகத்தை கையகப்படுத்தியது அதன் வரலாற்றில் முக்கியமான மைல்கல் ஆகும். இதன் மூலம் கூடுதல் அளவில் கார்கோ சரக்குகளை கையாள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

கங்கவரம் துறைமுகம், ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது அந்த மாநிலத்தின் மூன்றாவது பெரிய துறைமுகமாகும். இதன் மொத்த திறன் 64 எம்எம்டி என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், 1800 ஏக்கர் பரப்பளவில் 9 அடுக்குகளில் இந்த துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 31 அடுக்குகளாக இதனை விரிவுபடுத்தினால், ஒரு வருடத்திற்கு 250 எம்எம்டி திறன் அளவில் சரக்கு கையாளும் திறனை இந்த துறைமுகம் பெறும். இதனை அதானி போர்ட்ஸ் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் கையகப்படுத்தலுக்கு பின்னர், கங்கவரம் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 250 எம் எம் டி ஆக நிச்சயம் அதிகரிக்கும் என்றும், இதனால் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தொழில் புரட்சி பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதானி குழுமம், கங்கவரம் துறைமுகத்தை சுமார் 6200 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியுள்ளது. ஒரு பங்கின் விலை 120 ரூபாய் என்ற அளவில் இந்த துறைமுகம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, வார்பர்க் பிங்கஸ் நிறுவனத்திடம் இருந்து 31.5% கங்கவரம் துறைமுகத்தின் பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்தி இருந்தது. அதன் பின்னர், ஆந்திர பிரதேச மாநில அரசின் வசம் இருந்து, 10.4% பங்குகளை கையகப்படுத்தியது. தற்போது, DVS ராஜு குடும்பத்திடம் இருந்து மீதமுள்ள 58.1% பங்குகளும் அதானிக்கு குழுமத்திற்குச் சொந்தமாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu