அதானி போர்ட்ஸ் ஐ கைவிட்ட நார்வே வங்கி - பங்குகள் வீழ்ச்சி

May 17, 2024

நார்வே நாட்டின் மத்திய வங்கியான நோர்ஜஸ் வங்கி, அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதிக்கு தகுதியான நிறுவனங்கள் பட்டியலில் இருந்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை நீக்கி உள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 1.8% வரை வீழ்ச்சியடைந்தன. இன்றைய வர்த்தக நாளின் இடையில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1320.5 ரூபாயாக இருந்தது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனை […]

நார்வே நாட்டின் மத்திய வங்கியான நோர்ஜஸ் வங்கி, அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதிக்கு தகுதியான நிறுவனங்கள் பட்டியலில் இருந்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை நீக்கி உள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 1.8% வரை வீழ்ச்சியடைந்தன. இன்றைய வர்த்தக நாளின் இடையில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1320.5 ரூபாயாக இருந்தது.

அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனை மிகப் பெரிய அபாயமாக கருதி, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை நோர்ஜஸ் வங்கி கைவிட்டுள்ளது. அதானி போர்ட்ஸ் உடன் இணைந்து, அமெரிக்காவின் எல்3 ஹாரிஸ் டெக்னாலஜிஸ் மற்றும் சீனாவின் வெயிச்சாய் பவர் ஆகிய நிறுவனங்களும் கைவிடப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu