அதானி குழுமத்தை சேர்ந்த துறைமுக நிறுவனமான அதானி போர்ட்ஸ், 130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய தனது கடன் தொகையை முன்கூட்டியே செலுத்த உள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இதற்காக, ஜூலை 2024 வரை போடப்பட்டுள்ள பாண்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 24ம் தேதி, அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு வெகுவாக சரிந்தது. அதானி குழுமத்தின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்தனர். எனவே, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியாக, தனது கடன்களை திருப்பி செலுத்தும் நடவடிக்கையில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அதானி போர்ட்ஸ், தற்போது கடனை முன்கூட்டியே செலுத்துவதாக அறிவித்துள்ளது.