121 மில்லியன் டாலர்கள் கடன் - முன்கூட்டியே செலுத்தும் அதானி போர்ட்ஸ்

February 21, 2023

அதானி போர்ட்ஸ் நிறுவனம், தனது குறுகிய கால கடன் தொகையான சுமார் 121 மில்லியன் டாலர்களை முன்கூட்டியே செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் சரிவை சந்தித்துள்ள அதானி குழுமம், மீண்டெழும் முயற்சியாகவும், நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை தக்க வைக்கும் முயற்சியாகவும், கடன் தொகையை திருப்பி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று, சுமார் 15 பில்லியன் ரூபாய் மதிப்பிலான கடனை, அதானி போர்ட்ஸ் நிறுவனம் திருப்பி செலுத்தியது. இது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி திருப்பி செலுத்தப்பட்டுள்ள தொகை என்பது […]

அதானி போர்ட்ஸ் நிறுவனம், தனது குறுகிய கால கடன் தொகையான சுமார் 121 மில்லியன் டாலர்களை முன்கூட்டியே செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் சரிவை சந்தித்துள்ள அதானி குழுமம், மீண்டெழும் முயற்சியாகவும், நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை தக்க வைக்கும் முயற்சியாகவும், கடன் தொகையை திருப்பி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று, சுமார் 15 பில்லியன் ரூபாய் மதிப்பிலான கடனை, அதானி போர்ட்ஸ் நிறுவனம் திருப்பி செலுத்தியது. இது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி திருப்பி செலுத்தப்பட்டுள்ள தொகை என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போலவே, தற்போது, மார்ச் மாதத்தில், 121 மில்லியன் டாலர்கள் திருப்பி செலுத்தப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

முன்னதாக, நிகழாண்டில், கிட்டத்தட்ட 50 பில்லியன் ரூபாய் மதிப்பிலான கடன் தொகைகளை திருப்ப செலுத்த அதானி போர்ட்ஸ் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. மேலும், தற்போது 3 மடங்குக்கும் அதிகமாக உள்ள EBITDA விகிதத்தை 2.5 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu