கேரளாவில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில், அதானி போர்ட்ஸ் நிறுவனம் தனது முதலீட்டுத் தொகையை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலர்கள், அதாவது 100 பில்லியன் ரூபாய் அளவுக்கு முதலீட்டு தொகை உயர்த்தப்படுகிறது. பெரிய கப்பல்களை நிறுத்துவதற்கு ஏதுவாக, விழிஞ்சம் துறைமுகத்தில் நவீன கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்காக, இந்த முதலீட்டு தொகை செலவிடப்பட உள்ளது.
வரும் 2028 ஆம் ஆண்டு வாக்கில் கேரளாவில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தின் இரண்டாவது பகுதி செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அதானி போர்ட்ஸ் பெரும் முதலீட்டை குவிக்கிறது. இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், உலக அளவில் கடல்வழி வர்த்தக போக்குவரத்தில் பெரிய தாக்கம் ஏற்படும் என அதானி போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.