அதானி குழும பங்குகள் உயர்வு - 11 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது

August 18, 2023

நடப்பு வாரத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் உயர்வை பதிவு செய்துள்ளன. கிட்டத்தட்ட 12% உயர்வு இந்த வாரம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக இறுதியில், அதானி குழுமத்தை சேர்ந்த அனைத்து நிறுவன பங்குகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 11 லட்சம் கோடியை எட்டி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, 11 லட்சம் கோடி இலக்கை அதானி குழுமம் முதல் முறையாக எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதானி […]

நடப்பு வாரத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் உயர்வை பதிவு செய்துள்ளன. கிட்டத்தட்ட 12% உயர்வு இந்த வாரம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக இறுதியில், அதானி குழுமத்தை சேர்ந்த அனைத்து நிறுவன பங்குகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 11 லட்சம் கோடியை எட்டி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, 11 லட்சம் கோடி இலக்கை அதானி குழுமம் முதல் முறையாக எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதானி பவர் பங்குகள் 12% உயர்ந்து, 321 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதே வேளையில், அதானி கிரீன் எனர்ஜி 10%, அதானி எண்டர்பிரைசஸ் 9%, அதானி டோட்டல் கேஸ் 7%, அதானி வில்மர் 7% உயர்ந்து வர்த்தகமாகின. நிகழாண்டில் அதானி குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் என் டி டிவி நிறுவனங்களும் 3% மற்றும் 5% உயர்வை பதிவு செய்துள்ளன. அமெரிக்காவின் ஜிகியூஜி பார்ட்னர்ஸ் நிறுவனம் அதானி குழுமத்தில் தொடர் முதலீடுகளை செய்து வருவது, அதானி குழும ஏற்றத்திற்கு மிக முக்கிய காரணியாக சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu