அதானி பவர் நிறுவனத்தின் 8.1% பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த ஜிகியூஜி பார்ட்னர்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. கிட்டத்தட்ட 1.1 பில்லியன் டாலர்களுக்கு பங்கு விற்பனை நடைபெற்று உள்ளது. கிட்டத்தட்ட 31 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் அதானி பவர் பங்குகள் 3% உயர்ந்து வர்த்தகமாகின்றன. குறிப்பாக, மும்பை பங்குச்சந்தையில் அதானி பவர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 288.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலே, ஜிகியூஜி பார்ட்னர்ஸ் நிறுவனம் அதானி குழும பங்குகளை வாங்கி வருகிறது. இதுவரை 26445 கோடி மதிப்பிலான அதானி குழும பங்குகளை ஜி க்யூ ஜி பார்ட்னர்ஸ் வாங்கியுள்ளது. மேலும், அதானி குழும பங்குகளை வாங்கும் செயல்பாடுகளை ஜிகியூஜி பார்ட்னர்ஸ் தொடர்ந்து வருவதால், அதானி குழும பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின்றன.