அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 5% உயர்வை பதிவு செய்துள்ளன. மேலும், கடந்த 5 வர்த்தக நாட்களில், அதானி பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 9.21% உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆறு மாதத்தில், பங்குச் சந்தையில் 12.3% உயர்வு பதிவாகியுள்ளது. தொடர்ந்து, உயர்விலுள்ள அதானி குழுமத்தின் மதிப்பு, தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்னர், 113% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், அதானி பவர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 303.5 ரூபாய்க்கு வர்த்தகமானது.
கடந்த செப்டம்பர் மாதத்தில், டெலிஜன்ட் பவர் மற்றும் டிபி பவர் ஆகியவற்றை அதானி பவர் நிறுவனம் கையகப்படுத்த காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா அனுமதி வழங்கியது. அதன் பின்னர், தேசத்தின் அதிகரிக்கும் மின் தேவையை, அதானி பவர் நிறுவனம் நிர்வகிப்பது, பூர்த்தி செய்வது, மற்றும் உற்பத்தியில் பங்கெடுப்பது அதிகரித்துள்ளது.














