1.1 பில்லியன் டாலர் கடன் - திருப்பிச் செலுத்திய அதானி

February 7, 2023

கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து, சுமார் 9250 கோடி ரூபாய் (1.1 பில்லியன் டாலர்) மதிப்பிலான கடனை திருப்பி செலுத்தி உள்ளனர். முதலீட்டாளர்களின் நன்மைக்காக முன்கூட்டியே இந்த கடன் தொகை செலுத்தப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இந்தக் கடன், அதானி குழும பங்குகளுக்கு எதிராக பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அதானி குழுமம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, "அண்மைக்காலமாக, சந்தை நிலவரம் நிலைத் தன்மை இல்லாததாக உள்ளது. எனவே, முதலீட்டாளர்களுக்கு நாங்கள் […]

கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து, சுமார் 9250 கோடி ரூபாய் (1.1 பில்லியன் டாலர்) மதிப்பிலான கடனை திருப்பி செலுத்தி உள்ளனர். முதலீட்டாளர்களின் நன்மைக்காக முன்கூட்டியே இந்த கடன் தொகை செலுத்தப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இந்தக் கடன், அதானி குழும பங்குகளுக்கு எதிராக பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அதானி குழுமம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, "அண்மைக்காலமாக, சந்தை நிலவரம் நிலைத் தன்மை இல்லாததாக உள்ளது. எனவே, முதலீட்டாளர்களுக்கு நாங்கள் வாக்களித்தபடி, உரித்த தொகையை செலுத்த முடிவெடுத்துள்ளோம். எனவே, செப்டம்பர் 2024 ஆம் ஆண்டு வரை முதிர்வு காலம் உள்ள கடன்களை முன்னதாகவே திருப்பி செலுத்தி உள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அதானி குடும்பத்தின் இந்த அறிவிப்பு இன்றைய பங்குச் சந்தையிலும் எதிரொலித்ததாக கூறப்படுகிறது. இன்றைய பங்குச் சந்தையில் பெரும்பாலான அதானி நிறுவனப் பங்குகள் ஏற்றத்தை பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu