அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஜி க்யு ஜி பார்ட்னர்ஸ் (GQG Partners) என்ற நிறுவனத்திற்கு, அதானி குழுமம் தனது பங்குகளை விற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கிட்டத்தட்ட 1.87 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பங்குகள் விற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த குழுமத்தின் 4 நிறுவனப் பங்குகள் இதில் அடங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
முன்னதாக, அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்க, குழு அமைக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாள், அதானி குழும பங்குகள் விற்பனை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிளாக் டீல் மூலமாக இந்த பங்குகள் விற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பங்கு விற்பனை மதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பில் 154.46 பில்லியன் ஆகும். அதானி ஃபேமிலி டிரஸ்ட் இந்த பங்குகளை விற்பனை செய்துள்ளது. ஜி க்யு ஜி நிறுவனத்தின் சேர்மன் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி ராஜிவ் ஜெயின், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 3.4%, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் 4.1%, அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் 2.5%, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 3.5% பங்குகளைப் பெற்றுள்ளார். இவற்றின் மதிப்பு, முறையே 662, 640, 230, 340 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.