வியட்நாமில் துறைமுகம் கட்டி சர்வதேச இருப்பை வலுப்படுத்தும் அதானி குழுமம்

July 15, 2024

வியட்நாமில் உள்ள Da Nang பகுதியில் புதிய துறைமுகம் ஒன்றை கட்டமைக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் தனது இருப்பை விரிவுபடுத்தி வர்த்தகத்தை பெருக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை புளூம்பர்க் இதழில் வெளியாகி உள்ளது. அதானி குழுமத்திற்கு சொந்தமாக இலங்கையின் கொழும்பு, தான்சானியாவின் டார் எஸ் சலாம் மற்றும் இஸ்ரேலின் ஹைஃபா ஆகிய துறைமுகங்கள் இந்தியாவுக்கு வெளியே இயங்கி வருகின்றன. இந்த நிலையில், வியட்நாம் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் டா நாங் நகரில் […]

வியட்நாமில் உள்ள Da Nang பகுதியில் புதிய துறைமுகம் ஒன்றை கட்டமைக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் தனது இருப்பை விரிவுபடுத்தி வர்த்தகத்தை பெருக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை புளூம்பர்க் இதழில் வெளியாகி உள்ளது.

அதானி குழுமத்திற்கு சொந்தமாக இலங்கையின் கொழும்பு, தான்சானியாவின் டார் எஸ் சலாம் மற்றும் இஸ்ரேலின் ஹைஃபா ஆகிய துறைமுகங்கள் இந்தியாவுக்கு வெளியே இயங்கி வருகின்றன. இந்த நிலையில், வியட்நாம் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் டா நாங் நகரில் புதிய துறைமுகம் உருவாக்கப்பட உள்ளது. இந்த துறைமுகத்திற்கான முதலீடுகள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும், இது இந்தியாவின் வளர்ச்சிக்கு துணை புரியும் திட்டமாக இருக்கும் என்று அதானி போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் கரண் அதானி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu