குஜராத் மாநிலம் கட்சிப் பகுதியில் முந்த்ரா துறைமுகத்தை அதானி குழுமம் கட்டமைத்துள்ளது. இங்கு கப்பல் கட்டும் பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
உலக அளவில் வர்த்தக கப்பல் கட்டும் துறையில் இந்தியா 20-ஆம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் உள்ள கப்பல் கட்டும் நிலையங்கள் ஒரு 2028 வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், அதானி குழுமம் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல் கட்டும் பணிகளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கப்பல் காட்டும் துறையில் இந்தியா உலக அளவில் முன்னிலை பெறும். பசுமை எரிசக்தி மூலம் இயங்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த கப்பல்களை தயாரிக்க உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய கப்பல்களை மாற்றி விட்டு, அடுத்த 30 ஆண்டுகளில் புதிய கப்பல்களை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.