அதானி குழுமம் மற்றும் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக இயங்கும் அதானி டோட்டல் கேஸ் நிறுவனம், நகர எரிவாயு விநியோகத் துறையில் $375 மில்லியன் நிதியைப் பெற்றுள்ளது. இந்த நிதியை BNP Paribas, DBS Bank, Mizuho Bank, MUFG Bank மற்றும் Sumitomo Mitsui Banking Corporation ஆகிய வங்கிகள் வழங்கியுள்ளன.
இந்த நிதியை பயன்படுத்தி, அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் 13 மாநிலங்களில் உள்ள 34 புவியியல் பகுதிகளில் தனது எரிவாயு விநியோக நெட்வொர்க்கை விரிவுபடுத்த உள்ளது. இதன் மூலம், இந்திய மக்கள் தொகையில் 14 சதவீதத்தினருக்கு எரிவாயு வசதி கிடைக்க உள்ளது. இந்த நிதி திரட்டலை முன்வைத்து, கடந்த 5 நாட்களில் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.5% உயர்ந்துள்ளது.