வாகனங்களுக்கான மின்சார சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணியில் அதானி டோட்டல் எனர்ஜி நிறுவனம் மற்றும் எவேரா கேப்ஸ் நிறுவனம் கூட்டணியில் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் அதிகரிக்கும் மின்சார வாகன பயன்பாட்டை கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி டோட்டல் எனர்ஜி நிறுவனம், பிரக்ருதி இ மொபிலிட்டி (எவேரா) நிறுவனத்தின் கட்டமைப்புகளில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்துள்ளதன் மூலம், டெல்லியில் கிட்டத்தட்ட 200 மின்சார சார்ஜிங் நிலையங்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன. இதன் மூலம், எளிமையான முறையில் மின்சார வாகன சார்ஜிங் சாத்தியப்படுத்தப்படுகிறது.














