அதானி வில்மர் லாபம் 16% உயர்வு

February 9, 2023

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், அதானி வில்மர் நிறுவனத்தின் நிகர லாபம் 16.4% உயர்ந்து, 246 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 7% உயர்ந்து, 15438 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், 2022-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் மொத்த வளர்ச்சி 13% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதானி வில்மர் நிறுவனம், பல்வேறு வகையான நுகர்வோர் […]

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், அதானி வில்மர் நிறுவனத்தின் நிகர லாபம் 16.4% உயர்ந்து, 246 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 7% உயர்ந்து, 15438 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், 2022-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் மொத்த வளர்ச்சி 13% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதானி வில்மர் நிறுவனம், பல்வேறு வகையான நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்கிறது. எனவே, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் பண்டிகைக்காலம் என்பதால், நிறுவனத்திற்கு அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய அதானி வில்மர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அங்ஷு மல்லிக், "பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அதை நோக்கி எங்கள் நிறுவனம் பயணித்து வருகிறது. மேலும், மண்டலம் வாரியாக, தேவை அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்களை கண்டறிந்து, விற்பனையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu