மும்பையின் நெரிசலான விமான நிலையத்துக்கு 22 மைல் தென்கிழக்கில் புதிய விமான நிலையத்தை அமைக்கும் பணியில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. இது இந்தியாவின் வர்த்தக நகரத்தின் இரண்டாம் விமான நிலையமாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்திற்கான ஓடு பாதைகளை அமைப்பதற்காக அருகில் உள்ள குன்று தகர்க்கப்பட்டு வருகிறது.
தாமரை போன்ற வடிவில் அதானி குழுமம் கட்டி வரும் மும்பையின் இரண்டாம் விமான நிலையம் அமைகிறது. இந்த விமான நிலையத்தின் செயல்பாடுகள் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான நிலையத்தில் ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் ஏற்படுத்தப்படுகிறது. மேலும், வரும் 2032 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 19 மில்லியன் ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.