தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்காக கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவப்படை

March 25, 2024

பாராளுமன்ற தேர்தல் பணிக்காக தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சி.விஜில் செயலி மூலம் தமிழகத்தில் இதுவரை 11,305 புகார்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் 17,032 துப்பாக்கிகளை சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர். மேலும் 453 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அளித்து அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களிடமிருந்து 17,800 புகார்கள் கட்டுப்பாட்டறைக்கு வந்துள்ளது. இவை தவிர தமிழ்நாட்டிற்கு தற்போது கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர […]

பாராளுமன்ற தேர்தல் பணிக்காக தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சி.விஜில் செயலி மூலம் தமிழகத்தில் இதுவரை 11,305 புகார்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் 17,032 துப்பாக்கிகளை சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர். மேலும் 453 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அளித்து அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களிடமிருந்து 17,800 புகார்கள் கட்டுப்பாட்டறைக்கு வந்துள்ளது. இவை தவிர தமிழ்நாட்டிற்கு தற்போது கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர். அதன்படி தமிழகத்தில் மொத்தம் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் இதில் இதுவரை மதிமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.அதேபோன்று வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கையேடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது இந்த மாதம் இறுதி முதல் அது வீடு வீடாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu