செப். 24 முதல் நெல்லை–சென்னை வந்தே பாரத் ரெயிலில் 4 புதிய Chair Car பெட்டிகள் இணைப்பு.
நெடுந்தூர பயணத்தை விரைவாக சென்றடைய இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரெயில்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து, வழித்தடங்களும், வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி–சென்னை எக்மோர்–திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் (20666/20665) தற்போது 16 பெட்டிகளுடன் இயங்கிவருகிறது. நீண்டகாலமாக எழுந்த கோரிக்கைக்கு இணங்க, வரும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் இதில் 4 புதிய Chair Car பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதன்மூலம் 312 கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே 1128 இருக்கைகள் இருந்த நிலையில், தற்போது மொத்தம் 1440 இருக்கைகள் பயணிகளுக்காக கிடைக்க உள்ளது. ஆயுதபூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கும் நிலையில் தெற்கு ரெயில்வே அறிவித்த இந்த நடவடிக்கை பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














