இலங்கையில் தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி

March 15, 2023

இலங்கையில் தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற போருக்கு பின்னர் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் வீடுகள் கட்டித்தரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இலங்கையில் உள்ள மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகள் கட்டி தரும் திட்டத்தை முன்னெடுத்தது. […]

இலங்கையில் தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போருக்கு பின்னர் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் வீடுகள் கட்டித்தரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இலங்கையில் உள்ள மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகள் கட்டி தரும் திட்டத்தை முன்னெடுத்தது. அந்தவகையில் ஒரு வீட்டுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் என நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்தநிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது. வீடுகள் கட்டும் திட்டத்துக்கான கூடுதல் நிதியுடன் கூடிய உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரி கோபால் பாக்லே முன்னிலையில் கையெழுத்தான இந்த உடன்படிக்கை ஒப்பந்தத்தை இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொண்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu