தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை 3 நாட்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணம் செய்யும் பொது மக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களில் 9 நிமிடங்களுக்கு பதிலாக ஆறு நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவை மேற்கண்ட மூன்று நாட்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமமில்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துமாறும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.