அடினோவைரஸ் பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் பதற்றம்

மேற்கு வங்க மாநிலத்தில், அடினோவைரஸ் பரவல் காணப்படுகிறது. இது குழந்தைகளின் உடல்நிலையை மிகவும் பாதிப்படைய செய்வதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அம்மாநில சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளை ஏற்பாடு செய்வது, இலவச ஆலோசனை வழங்க ஹெல்ப்லைன் அமைப்பது உள்ளிட்டவைகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. அடினோவைரஸ் தொற்று காரணமாக சுவாசக் கோளாறுகள் தென்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மாநில அரசு இதற்கான […]

மேற்கு வங்க மாநிலத்தில், அடினோவைரஸ் பரவல் காணப்படுகிறது. இது குழந்தைகளின் உடல்நிலையை மிகவும் பாதிப்படைய செய்வதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அம்மாநில சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளை ஏற்பாடு செய்வது, இலவச ஆலோசனை வழங்க ஹெல்ப்லைன் அமைப்பது உள்ளிட்டவைகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

அடினோவைரஸ் தொற்று காரணமாக சுவாசக் கோளாறுகள் தென்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மாநில அரசு இதற்கான தயார் நிலையில் இல்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. சமூக ஊடகங்களில், அடினோ வைரஸ் உயிரிழப்புகள் ஐம்பதை எட்டி உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், மேற்குவங்க அரசாங்கம், 2 குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளதாக கூறுகிறது. மேலும், 12 குழந்தைகளுக்கு மட்டுமே தொற்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "வைரஸ் தொற்று ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நிகழும் ஒன்றே. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். நாங்கள் கூடுதலாக 5000 படுக்கைகள் மற்றும் 600 மருத்துவர்களை ஏற்பாடு செய்துள்ளோம்" என்று கூறினார். அதே வேளையில், மற்ற ஆண்டுகளை விட, நடப்பு ஆண்டில், 50% கூடுதலாக தொற்று காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu