தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டு இருந்தனர்.
இந்தியாவில் ஆதிச்சநல்லூரில் முதல் முறையாக கடந்த 1876 ஆம் ஆண்டு அகழாய்வு நடந்தது. இது பல கட்டங்களாக மத்திய மாநில அரசுகளின் சார்பில் இன்று வரை பணிகள் அகழாய்வு பணிகள் நடந்துவருகிறது. இந்தப் பகுதியில் தமிழர்களின் வாழ்விடம், பொதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், வெண்கல பொருட்கள், தங்க நெற்றி பட்டயம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாகரீகம் உலகிற்கு தெரியவந்துள்ளது. அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அங்கே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இது 145 ஆண்டுகளாக தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. தற்போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 2020 ஆம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். இதற்கு கனிமொழி முன்னிலை வகித்தார். அமைச்சர்கள், மேயர், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, பஞ்சாயத்து தலைவர், கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.