நகை வர்த்தகத்தில் கால் பதிக்கும் ஆதித்ய பிர்லா குழுமம்

June 6, 2023

ஆதித்ய பிர்லா குழுமம், முதல் முறையாக, நகைகள் சில்லறை வர்த்தகத்தில் கால் பதிக்க உள்ளது. இதற்காக, 5000 கோடி முதலீடு செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், பெயிண்ட் வர்த்தகம் மற்றும் கட்டுமான பொருட்களுக்கான பி2பி இணைய வர்த்தகம் ஆகியவற்றில் ஆதித்ய பிர்லா குழுமம் புதிதாக களமிறங்கியது. அதைத்தொடர்ந்து, தற்போது, ‘நோவல் ஜுவல்ஸ்’ என்ற பெயரில், நகைகள் சில்லறை வர்த்தகத்தில் களமிறங்கி உள்ளது. இதன் மூலம், பிரபல பிராண்டுகளின் நகைகளை இந்தியா முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த […]

ஆதித்ய பிர்லா குழுமம், முதல் முறையாக, நகைகள் சில்லறை வர்த்தகத்தில் கால் பதிக்க உள்ளது. இதற்காக, 5000 கோடி முதலீடு செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், பெயிண்ட் வர்த்தகம் மற்றும் கட்டுமான பொருட்களுக்கான பி2பி இணைய வர்த்தகம் ஆகியவற்றில் ஆதித்ய பிர்லா குழுமம் புதிதாக களமிறங்கியது. அதைத்தொடர்ந்து, தற்போது, ‘நோவல் ஜுவல்ஸ்’ என்ற பெயரில், நகைகள் சில்லறை வர்த்தகத்தில் களமிறங்கி உள்ளது. இதன் மூலம், பிரபல பிராண்டுகளின் நகைகளை இந்தியா முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

கடந்த 2022 நவம்பரில், ஆதித்ய பிர்லா குழுமம், புதிய வர்த்தகம் ஒன்றில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. பிராண்டட் நகைகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளதால், டாடாவின் தனிஷ்க் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக இது அமையும் என்று கருதப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. நகைகள் வர்த்தகத்தில் கால் பதித்து, குழுமத்தின் வர்த்தகத்தை விரிவாக்குவதில் மகிழ்ச்சி அடைவதாக ஆதித்ய பிர்லா குழுமத்தின் சேர்மன் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu