சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் விண்வெளி பயணமாக ஆதித்யா எல் -1 விண்கலம் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இது 125 நாட்கள் பயணத்திற்கு பிறகு தற்போது சூரியனுக்கு மிக அருகில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி எல்-1 ஐ சுற்றி ஒரு ஹாலோ சுற்று பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் சூரியனின் பல்வேறு வகையான படங்களை எடுத்து இந்த பூமிக்கு அனுப்பியுள்ளது. மேலும் இவை அறிவியல் சோதனைகள் தொடர்பான படங்களை அனுப்ப இருக்கின்றது. இந்நிலையில் இதன் இறுதி கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இந்த விண்கலம் எல் -1 புள்ளியில் நுழைவதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதிக்குள் இறுதி கட்டப் பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.