ஆதித்யா எல் 1 எடுத்த பூமி மற்றும் நிலவு புகைப்படங்கள் - இஸ்ரோ பகிர்வு

September 7, 2023

கடந்த செப்டம்பர் 2ம் தேதி, ஆதித்யா எல் 1 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியாவின் முதல் சூரியன் திட்டம் இது ஆகும். தற்போது, ஆதித்யா எல் 1 விண்கலம், விண்வெளியில் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. குறிப்பாக, ஆதித்யா எல் 1 தன்னைத்தானே செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம், பூமி மற்றும் நிலவு புகைப்படங்கள் ஆகியவற்றை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. ஆதித்யா எல் 1, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நகர்ந்து சென்ற […]

கடந்த செப்டம்பர் 2ம் தேதி, ஆதித்யா எல் 1 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியாவின் முதல் சூரியன் திட்டம் இது ஆகும். தற்போது, ஆதித்யா எல் 1 விண்கலம், விண்வெளியில் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

குறிப்பாக, ஆதித்யா எல் 1 தன்னைத்தானே செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம், பூமி மற்றும் நிலவு புகைப்படங்கள் ஆகியவற்றை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. ஆதித்யா எல் 1, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நகர்ந்து சென்ற போது, பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. செப்டம்பர் 4ம் தேதி எடுக்கப்பட்டதாக, 41 வினாடி வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu