பாராளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, அதானி விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் ஆகியவற்றால் பாராளுமன்றத்தின் இரு அவையிலும் பணிகள் முடங்கின.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை காலையில் கூடியது. அப்போது அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.