ராஜ்யசபை வருகிற 23-ந்தேதி காலை வரை ஒத்திவைப்பு

March 21, 2023

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர் அமளியால் ராஜ்யசபை வருகிற 23-ந்தேதி காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு, கடந்த 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 6-ந்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும். எனினும், கூட்டத்தொடர் தொடங்கியது முதல், இரு அவைகளிலும் ராகுல் காந்தி மற்றும் தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றை பற்றி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி, கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் நாடாளுமன்ற மேலவை கூடியதும் […]

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர் அமளியால் ராஜ்யசபை வருகிற 23-ந்தேதி காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு, கடந்த 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 6-ந்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும். எனினும், கூட்டத்தொடர் தொடங்கியது முதல், இரு அவைகளிலும் ராகுல் காந்தி மற்றும் தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றை பற்றி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி, கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் நாடாளுமன்ற மேலவை கூடியதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை வருகிற 23-ந்தேதி காலை வரை ஒத்தி வைத்து அவை தலைவர் உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அதானி விவகாரம் எதிரொலியாக, தொடர்ந்து அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டு அவையில் எந்தவித நடவடிக்கைகளும் நடத்த முடியாமல் நாடாளுமன்றம் சீரான முறையில் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu