பிரபல செய்தி நிறுவனமான பிபிசியின் இந்தியப் பிரிவில், வரி ஏய்ப்புகள் நடந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததை பிபிசி இந்தியா ஒத்துக் கொண்டதாக, மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை பிபிசி நிறுவனம் வெளியிட்டது. இதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மூன்று நாட்களுக்கு பிபிசி அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த சோதனையில், பிபிசி நிறுவனம் வருவாய்க்கான வரியை முறையாக செலுத்தாதது குறித்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணப்பட சர்ச்சையில், பிபிசி மீது மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. தற்போது, பிபிசி யின் ஆங்கிலம் தவிர்த்த பிற இந்திய மொழி நிறுவனங்களின் வருவாய் விவரங்களில் உறுதித் தன்மை இல்லை. மேலும், பிபிசி நிறுவனமே வரி ஏய்ப்பு செய்ததை ஒத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.