பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க நிறுவனம் ரீஃபிரேஸ் ஏஐ ஆகும். இந்த நிறுவனத்தை அடோப் நிறுவனம் வாங்கியுள்ளது.
ரீஃபிரேஸ் ஏஐ நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வீடியோ கிரியேஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை, அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி மென்பொருள் நிறுவனமான அடோப் வாங்கியுள்ளது. அதன்படி, ரீஃபிரேஸ் ஏஐ நிறுவனத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகளை அடோப் பயன்படுத்த உள்ளது. இதன் மூலம், அடோப் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன் வலிமை அடைய உள்ளது. மேலும், ரீஃபிரேஸ் ஏஐ நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் அடோப் நிறுவன ஊழியர்களாக பணியாற்ற உள்ளனர். ரீஃபிரேஸ் ஏஐ நிறுவனம் ஐஐடி பட்டதாரிகளால் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.