அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு அமலுக்கு வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் அபூர்வா உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு இந்த நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பழைய விகிதப்படி வீடு கட்டுவதற்கான முன்பணத்தைப் பெற ஒப்புதல் கிடைக்கப் […]

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு அமலுக்கு வந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் அபூர்வா உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு இந்த நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பழைய விகிதப்படி வீடு கட்டுவதற்கான முன்பணத்தைப் பெற ஒப்புதல் கிடைக்கப் பெற்று, ஒரு தவணைத் தொகை கூட பெறாதவர்களுக்கு புதிய உயர்த்தப்பட்ட விகிதம் பொருந்தும். அவர்கள் ரூ.40 லட்சத்துக்குப் பதிலாக ரூ.50 லட்சம் வரையில் முன்பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu