விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் வருமானவரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வு துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் தேர்தல் பணியில் கூடுதல் பாதுகாப்புக்கு என்னென்ன தேவைப்படும்
என்பது குறித்த ஆலோசனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்தலின் போது ஏற்படும் முறைகேடுகள் பணப்பட்டுவாடா ஆகியவற்றை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விதிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. மேலும் இது தொடர்பாக நாளை மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.