சென்னையில் உள்ள ஐந்து ரயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
கோடை காலத்தில் இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்காக புது பெட்டிகள் இருக்கும் பகுதியில் இந்த மலிவு விலை உணவு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.இவை சென்னை கோட்டத்தில் ஐந்து ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டது. அதேபோன்று முதல் கட்டமாக 34 ரயில் நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.