புதுடெல்லியில் இயங்கி வரும் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆப்கானிஸ்தான் தூதரகத்துக்கு இந்திய அரசு சார்பில் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. மேலும், ஆப்கானில் உள்ள இந்திய தூதர் திரும்பப் பெறப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை ஆதரிப்பது தொடர்பாக ஐநாவின் முடிவை பின்பற்ற உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. எனவே, கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல், இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், அவசர தூதரக சேவைகளை மட்டுமே மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், இந்திய அரசு சார்பில் தொடர்ந்து எந்தவித ஆதரவும் கொடுக்கப்படவில்லை. மேலும், வெளியுறவுத்துறை சார்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. தலிபான் தரப்பில் இருந்தும் அழுத்தம் அதிகரித்துள்ளது. எனவே, தூதரகத்தை நிரந்தரமாக மூட உள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














