ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில், கிட்டத்தட்ட 140 பேர் கார்பன் மோனாக்சைடு வாயுவை அதிகமாக சுவாசித்ததால், பாதிக்கப்படைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று கூறப்படுகிறது.
ஹெராத் மாகாண மக்கள், தங்கள் வீடுகளை குளிரிலிருந்து பாதுகாக்க கார்பன் மோனாக்சைடு வாயுவை பயன்படுத்துகின்றனர். மேலும், கடும் குளிர் நிலவி வரும் இந்த மாகாணத்தில் மின்சாரமும் இல்லை என்பதால், நிலக்கரி மூலம் வெப்பத்தை ஏற்படுத்த மக்கள் முயன்றுள்ளனர். இவற்றின் மூலமாகவும் கார்பன் மோனாக்சைடு அளவு அதிகரித்துள்ளது. அத்துடன், விறகுகளின் விலை அதிகம் என்பதாலும், நாட்டில் வாழ்வாதாரத்திற்கான செலவுகள் அதிகம் என்பதாலும், கார்பன் மோனாக்சைடு வாயுவை பயன்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 140 பேர் வரை கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














