ஆப்கானிஸ்தான் - பள்ளிச் சிறுமிகள் மீது விஷத் தாக்குதல் - 80 சிறுமிகள் உடல்நல பாதிப்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள 2 பள்ளிகளில், சிறுமிகள் மீது விஷ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, 80 சிறுமிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்-ஏ-புல் மாகாணத்தில் உள்ள 2 பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகள் மீது விஷ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதே வேளையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு தாலிபான்கள் […]

ஆப்கானிஸ்தானில் உள்ள 2 பள்ளிகளில், சிறுமிகள் மீது விஷ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, 80 சிறுமிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சர்-ஏ-புல் மாகாணத்தில் உள்ள 2 பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகள் மீது விஷ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதே வேளையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு தாலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த தாக்குதல் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மாகாணத்தின் கல்வித் துறை தலைவர் முகமது ரஹ்மானி, இந்த தாக்குதல் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்தது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், சிகிச்சைக்குப் பிறகு, சிறுமிகள் உடல் நலம் முன்னேறி உள்ளதாக கூறியுள்ளார். ஆனால், எந்த வகையான விஷம் பயன்படுத்தப்பட்டது, சிறுமிகளுக்கு எந்த வகையில் உடல் நல பாதிப்பு நேர்ந்தது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu