கடந்த வாரம், இந்தியாவில் உள்ள தனது தூதரகத்தை நிரந்தரமாக மூட உள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்திருந்தது. தற்போது, இந்தியாவில் தனது தூதரகத்தை திறக்க உள்ளதாக தாலிபான் அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த வெளியுறவு விவகார இணை அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டனிக்ஷை, இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை திறக்க உள்ளதாக, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கானிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள், இருதரப்பு உறவை வலுப்படுத்தும் முறையில் செயல்படுவர் என கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தியர்களுக்கு முறையான சேவைகள் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்வர் என தெரிவித்துள்ளார்.