தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூப்பர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்புக்காக சிறப்பு பொறியியல் குழுவினர் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடா 9 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சூப்பர் காரை ஆப்கானிஸ்தான் உயர்கல்வித்துறை அமைச்சர் அப்துல் அறிமுகம் செய்து வைத்தார். மேலும், “ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மதம் மற்றும் நவீன அறிவியல் சார்ந்த வாழ்வை தாலிபான் அரசு உறுதி செய்யும் என்பது இந்த கார் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இந்த சூப்பர் கார் உருவாக்கத்தில் 30 பொறியாளர்கள் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இந்த காரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.