கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பரவல் - பன்றிகளை அழிக்க உத்தரவு

கேரளாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, கண்ணூர் மாவட்டம் உதயகிரி கிராமத்தில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பன்றி பண்ணைகளில் உள்ள அனைத்து பன்றிகளையும் அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கண்ணூர் மாவட்ட ஆட்சியர் எஸ் சந்திரசேகர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள 4 பண்ணைகளில், தற்போது இருக்கும் அனைத்து பன்றிகளையும் கொன்று புதைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிப்பு பதிவான பகுதியின் […]

கேரளாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, கண்ணூர் மாவட்டம் உதயகிரி கிராமத்தில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பன்றி பண்ணைகளில் உள்ள அனைத்து பன்றிகளையும் அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்ணூர் மாவட்ட ஆட்சியர் எஸ் சந்திரசேகர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள 4 பண்ணைகளில், தற்போது இருக்கும் அனைத்து பன்றிகளையும் கொன்று புதைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிப்பு பதிவான பகுதியின் 10 கிலோமீட்டர் சுற்றளவை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த கூறியுள்ளார். எனவே, கிட்டத்தட்ட 93 பன்றிகள் அழிக்கப்படும் என கருதப்படுகிறது. மேலும், இந்தப் பண்ணைகளில் இருந்து வேறு பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பன்றிகளையும் சோதனை செய்து, அந்தந்த பண்ணைகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பகுதியில் பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பன்றி காய்ச்சல் பாதிப்பு பதிவான பண்ணையில் இருந்து பன்றிகள் எங்கெங்கு விற்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பன்றிக் காய்ச்சல் பரவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu