18 மாதங்கள் கழித்து இந்தியாவுக்கான புதிய சீன தூதர் நியமனம்

May 8, 2024

கிட்டத்தட்ட 18 மாதங்கள் கழித்து, இந்தியாவுக்கான புதிய சீன தூதர் நியமிக்கப்பட்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் அவருக்கு பணி நியமனம் செய்து வைத்தார். சீன வெளியுறவுத் துறையில் மூத்த அதிகாரியாக உள்ள சூ ஃபெய்காங் இந்தியாவுக்கான சீன தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா சீனா உறவில் சிக்கல் நீடித்து வந்தது. இதனால் இந்தியாவுக்கான தூதர் நியமிக்கப்படாமல் இருந்தார். தற்போது, 18 மாதங்கள் கழித்து புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சூ ஃபெய்காங், இதற்கு […]

கிட்டத்தட்ட 18 மாதங்கள் கழித்து, இந்தியாவுக்கான புதிய சீன தூதர் நியமிக்கப்பட்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் அவருக்கு பணி நியமனம் செய்து வைத்தார்.

சீன வெளியுறவுத் துறையில் மூத்த அதிகாரியாக உள்ள சூ ஃபெய்காங் இந்தியாவுக்கான சீன தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா சீனா உறவில் சிக்கல் நீடித்து வந்தது. இதனால் இந்தியாவுக்கான தூதர் நியமிக்கப்படாமல் இருந்தார். தற்போது, 18 மாதங்கள் கழித்து புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சூ ஃபெய்காங், இதற்கு முன்பு ருமேனியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தூதுவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu