சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படவுள்ளது
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்தலை 12 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுதல் குழு அமைத்து, ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் நடத்தப்பட உள்ளது.இந்த தேர்தலில் தலைவரும், துணைத் தலைவர்களும், பொதுச் செயலாளரும், பொருளாளரும் மற்றும் கமிட்டி உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் 7-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இறுதி வாக்குப் பதிவு 15-ந்தேதி நடைபெறும். 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.