எய்ம்ஸ்-ஐ தொடர்ந்து, ஐ சி எம் ஆர் வலைத்தளத்தை 6000 முறை ஹேக் செய்ய முயற்சி

December 7, 2022

சில நாட்களுக்கு முன்னர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ICMR ன் வலைத்தளத்தை ஹேக் செய்ய பெரும் முயற்சி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் 30ஆம் தேதி, சுமார் 6000 முறை, ஐ சி எம் ஆர் வலைத்தளத்தை ஹேக் செய்ய முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹேக் செய்த ஐபி அட்ரஸ்-ஐ தேடிச் சென்றபோது, அது ஹாங்காங்கில் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள ஐபி என்று தெரிய […]

சில நாட்களுக்கு முன்னர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ICMR ன் வலைத்தளத்தை ஹேக் செய்ய பெரும் முயற்சி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் 30ஆம் தேதி, சுமார் 6000 முறை, ஐ சி எம் ஆர் வலைத்தளத்தை ஹேக் செய்ய முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹேக் செய்த ஐபி அட்ரஸ்-ஐ தேடிச் சென்றபோது, அது ஹாங்காங்கில் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள ஐபி என்று தெரிய வந்துள்ளது. நல்வாய்ப்பாக, ஐ சி எம் ஆர் வலைத்தளத்தை ஹேக் செய்ய முடியவில்லை. வலைத்தளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் சிறந்த முறையில் பேணப்பட்டு வந்ததால். ஹேக்கிங் முயற்சி தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், டிசம்பர் 4ம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிரில் உள்ள Safdarjung மருத்துவமனை, சைபர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu