அமெரிக்காவைப் போலவே, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேல் இனி UNHRC-வில் பங்கேற்காது என்றும் அவர் கூறினார். எக்ஸ் வலைதளத்தில், "ஜனாதிபதி டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. UNHRC மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயகமான இஸ்ரேலை அரக்கத்தனமாக சித்தரிக்கிறது. யூத விரோதத்தை ஊக்குவிக்கிறது" என அவர் குற்றம்சாட்டினார்.
ஈரான், கியூபா, வட கொரியா, வெனிசுலா போன்ற நாடுகளுக்கு விடுத்த விமர்சனத்தை விட, இஸ்ரேல் மீது அதிக அவதூறு ஏற்படுத்தப்படுவதாகவும், இந்த பாகுபாட்டை இனி ஏற்க மாட்டோம் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.












