ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஒரு பாக்சிங் கிளப்பில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதி சியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து காபுலில் நகர காவல் துறையின் தலைமை செய்தி தொடர்பாளர் காலித் கூறுகையில், குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனினும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.














