அக்னிகுள் நிறுவனத்தின் அக்னிபான் வெற்றிகரமாக ஏவப்பட்டது

சென்னையைச் சேர்ந்த விண்வெளித் துறை புத்தாக்க நிறுவனமான அக்னிகுள் காஸ்மோஸ், அக்னிபான் என்ற பெயரில் 3டி பிரிண்டட் செமிக்கரையோஜெனிக் ராக்கெட்டை வடிவமைத்திருந்தது. இந்த ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவுக்கு சொந்தமான சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் அமைக்கப்பட்டிருந்த தனியார் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் 3டி பிரிண்டெட் செமி கிரையோஜெனிக் ராக்கெட் அக்னிபான் ஆகும். இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதன் […]

சென்னையைச் சேர்ந்த விண்வெளித் துறை புத்தாக்க நிறுவனமான அக்னிகுள் காஸ்மோஸ், அக்னிபான் என்ற பெயரில் 3டி பிரிண்டட் செமிக்கரையோஜெனிக் ராக்கெட்டை வடிவமைத்திருந்தது. இந்த ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவுக்கு சொந்தமான சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் அமைக்கப்பட்டிருந்த தனியார் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் 3டி பிரிண்டெட் செமி கிரையோஜெனிக் ராக்கெட் அக்னிபான் ஆகும். இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம், இந்த நாள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அக்னிபான் திட்டம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட இந்த திட்டம், இன்று காலை 7 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அக்னிபான் ராக்கெட் 300 கிலோ எடை கொண்டது. சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க கூடியது. இந்த திட்டம் முழுமையான வெற்றி அடைந்ததற்கு அக்னிகுள் நிறுவனத்துக்கு இஸ்ரோ பாராட்டு தெரிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது பற்றிய பாராட்டு பதிவை பகிர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu