இந்தியாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் அக்னிகுள் காஸ்மோஸ் ஆகும். இந்த நிறுவனம் தயாரித்துள்ள ராக்கெட்டுக்கான முதல் சோதனை விரைவில் நடைபெற உள்ளது.
அக்னிக்குள் நிறுவனம், SOrTeD (Sub-Obital Technology Demonstrator) என்ற திட்டத்தில் பணியாற்றி வருகிறது. அதன் பகுதியாக அக்னிகுள் நிறுவனம் வடிவமைத்த ராக்கெட் வெறும் 2 நிமிடங்களுக்கு சோதனை செய்யப்பட உள்ளது. இதன் போது ராக்கெட் ஏவப்பட்டு மீண்டும் தரையிறங்குவது சோதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரித்த அக்னிபான் இஸ்ரோவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த நிறுவனம் தயாரித்துள்ள 6.2 மீட்டர் உயரம் கொண்ட ராக்கெட் சோதனைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த திட்டம் முழுமையான வெற்றி அடையும் பட்சத்தில், இந்தியாவின் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் திட்டங்களுக்கு அக்னிகுள் நிறுவனத்தின் ராக்கெட் புதிய பாதை வகுக்கும் என கருதப்படுகிறது.














