மருத்துவ துறையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இதய பாதிப்புகளை 30 நிமிடங்களுக்கு முன்பாக கண்டறியும் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற இதயத்துடிப்பை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை விடுக்கிறது.
லக்சம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதய பாதிப்பை கண்டறிந்து எச்சரிக்கை விடும் செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவி 80% துல்லியமாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களில் இதனை நிறுவிக்கொள்ள முடியும். ஊஹானில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 350 நோயாளிகளிடம் பரிசோதனை செய்து இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு WARN (Warning of Atrial fibRillatioN) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம், நோயாளிகளின் மதிப்பு மிக்க உயிர் பறிபோவதை தடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.