சாம் அல்ட்மேன் பிரதமர் மோடி சந்திப்பு

ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மேன் இந்தியா வருகை தந்துள்ளார். இந்த வாரம் முழுவதும் அவர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி முன்னணியில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, ‘இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு […]

ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மேன் இந்தியா வருகை தந்துள்ளார். இந்த வாரம் முழுவதும் அவர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி முன்னணியில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, ‘இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு’ குறித்து ஆழமான கலந்துரையாடல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சாம் அல்ட்மேன், பிரதமர் மோடியுடனான கலந்துரையாடல் மகிழ்ச்சிகரமாக இருந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதே சமயத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வரவை இந்தியா வரவேற்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu