ஏஐ தொழில்நுட்பத்தால் சமூகத்துக்கு ஆபத்து - அமெரிக்க அதிபர் பைடன்

April 6, 2023

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிகழ்வு ஒன்றில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களிடம் ஜோ பைடன் பேசும்போது, “தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை சந்தைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் அதன் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வது அவசியம். நோய் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களைச் சமாளிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவக் கூடும். அதேநேரத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் சமூகத்துக்கு […]

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிகழ்வு ஒன்றில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களிடம் ஜோ பைடன் பேசும்போது, “தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை சந்தைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் அதன் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வது அவசியம். நோய் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களைச் சமாளிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவக் கூடும். அதேநேரத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் சமூகத்துக்கு ஆபத்தானவையாக இருக்கலாம் என்றார்.

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருளை மனித மனதைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் தொழில்நுட்ப முறையாகும். முன்னதாக, செயற்கை நுண்ணறிவில் அசாத்திய ஆற்றல் கொண்டதாக கூறப்பட்ட சாட் ஜிபிடிக்கு இத்தாலியில் தடை விதிக்கப்பட்டது. பயனர்களிடமிருந்து அவர்களது தனிப்பட்ட தரவுகளை முறையற்ற முறையில் சேகரித்த காரணத்திற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டதாக இத்தாலி அரசு விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu